பெண்கள் சமூக ஆரோக்கிய முன்னேற்றத்திட்டம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 18:32

செம்பருத்திவிளை தூய அந்தோணியார் ஆலயத்துக்குட்பட்ட பெண்கள் சமூக ஆரோக்கிய முன்னேற்றத்திட்டம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தூய அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடந்தது. 

பங்கு தந்தை ராபர்ட ஜாண் கென்னனடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் பொறுப்பாளர்கள் வின்சி, மரிய பேபி, பியூலா, ஜோஸ்பின், சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.