ஆண்டிபட்டி : நெசவாளர்களுக்கு கூலி நிலுவை தொகை வழங்கல்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 15:57

தேனி ஆக - 1

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக  சம்பள தொகை நிலுவையில் உள்ளதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்தோடு தவித்து வந்தனர்.

இதனால் அரசு நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சக்கம்பட்டி பகுதிகளில் மொத்தம் 7 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்களில் தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலை மற்றும் விலையில்லா சீறுடை உற்பத்தி திட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் விசைத்தறிகள் இயங்கி வருகிறது.மேலும் இந்த கூட்டுறவு சங்கங்களின் கீழ் 910 உறுப்பினர்களும் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.


 இந்நிலையில்  நெசவளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.சம்பள நிலுவை தொகை  மொத்தம்  1 கோடியே  39 லட்சம் ரூபாயாக இருந்தது.தற்போது முதல் கட்டமாக ரூபாய் 35 லட்சம் சம்பள நிலுவை தொகை வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த நெசவாளர்கள், விரைவில் பாக்கி சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்றனர்.