கொரோனா எதிரொலி புதியம்புத்தூர் பகுதியில் எஸ்பி திடீர் ஆய்வு

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 15:54

தூத்துக்குடி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுபடுத்தப்பட்ட பகுதியான புதியம்புத்தூர் தெற்கு காலனியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு காலனியில் அதிக பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியை நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலாயுதபுரம், புதியம்புத்தூர், முப்பிலிவெட்டி, ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி, ஓசனூத்து, கொம்பாடி, மணியாச்சி, நாரைக்கிணறு, சவாலாப்பேரி, ஆலந்தா, காசிலிங்காபுரம், தெய்வசெயல்புரம் ஆகிய பகுதிகளுக்கும், மணியாச்சி, புளியம்பட்டி, நாரைக்கிணறு ஆகிய காவல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.