கமிஷனர் அலுவலக துாய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப்பொருட்கள் * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 23:26

கமிஷனர் அலுவலக துாய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. அதனை நேற்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் வழங்கினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். அந்த தொகுப்பில் வீட்டுக்கு தேவையான 1 மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், மிளகாய் தூள், கோதுமை, மைதா, மிளகு, டீத்தூள் ஆகிய பொருட்கள் இருந்தன. இந்த நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர்கள் திருநாவுக்கரசு, சுதாகர் ஆகியோர் இருந்தனர். கோட்டாக் மகிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் துாய்மைப்பணியாளர்களுக்கு இதனை நிவாரணமாக வழங்கியதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. கோட்டாக் மஹிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.