தேனி: கோவிட் கேர் மையம் தொடக்கம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 22:24

தேனி, ஜூலை. 4 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில். கோவிட் கேர் மையம் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் கோவிட் கேர் சென்டர்களை அமைக்க முடிவு செய்தது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, தேனி, போடி, கம்பம் ஆகிய அரசு மருத்துவ மனைகளில் கோவிட் கேர் சென்டர் தொடங்கப் பட்டுள்ளது.

தற்போது உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கவுதியா கல்லூரி வளாகத்தில் கோவிட் கேர் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது.கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


100 படுக்கை வசதிகளுடன் கோவிட்  கேர் சென்டர் செயல்பட உள்ளது என்று மருத்துவ அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.