எய்ம்ஸ் மருத்துமனை கெசட்டில் வெளியிட்டது மத்திய அரசு.. சரியான பதில்! அமைச்சர் பேட்டி!

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 22:21

எய்ம்ஸ் மருத்துமனை பொறுத்தவரையில் பொய்ப்பிரச்சாரம் இங்கே எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று சொன்னவர்களுக்கு கெசட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு வெளியிட்டது  சரியான பதிலடி  - வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி.

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மாவட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,உலகையே அச்சுறுத்தி வருகிறது வைரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

கவனக்குறைவான போது எதிர்ப்பு சக்தி குறைவாக வோ நோய்த்தொற்றுக்கு முற்படுபவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குறிப்பாக வீடு வீடாக சென்று அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து வருகிறது தமிழக அரசு வைரஸ் தொற்று  பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு அனைத்து சத்தான உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டத்திற்கு வருமா என்ற ஐயப்பாடு ஒரு சிலர் இருந்தனர் ஆனால் நாங்கள் உறுதியாக சொன்னோம் எம்ஸ் மருத்துவமனையில் வரும் என்று ஆனால் அதை சிலர் விமர்சனம் செய்தார்கள் அதனால் இப்பொழுது மருத்துவமனை உறுதியாக போவதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டது இதற்கு சாட்சியாக இந்திய அரசு நாளிழதலே வந்துவிட்டது.

எய்ம்ஸ் மருத்துமனை பொறுத்தவரையில் பொய்ப்பிரச்சாரம் இங்கே எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று சொன்னவர்களுக்கு இது ஒரு சரியான பதிலடி நமது மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் மற்றும் இங்கே நிறைய மருத்துவர்கள் உள்ளனர்.

இந்த நோய்த் தொற்றைப் அதிகமாவதால் அச்சப்படத் தேவையில்லை கண்டறியப்பட்டால் குணப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவான ஊரடங்கு என்பது இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்தடுத்த ஊரடங்கு உத்தரவு பற்றி ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்