39 பேர் அட்மிட் 34 பேர் டிஸ்சார்ஜ்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 22:12

நாகர்கோவில், ஜூலை 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் 39 பேரும், குணமடைந்து வீட்டுக்கு 34பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒருவருக்கு, வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு என்று பட்டியல் நீள்கிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 39பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 34பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.