லாக்டவுனில் டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 22:10

சென்னை, ஆர்.கே.நகர் மற்றும் மாதவரம் பகுதியில் லாக்டவுனில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னையில் ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கள்ளமார்க்கெட்டில் மதுபானங்கள் விற்பவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். சென்னையில் ஆர்கே. நகர் போலீசார் நேற்று மதியம் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர் இரயில்வே தண்டவாளம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். 


அப்போது அங்கு டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த சொக்கம்மாள் (67), அவரது மகன் ஜெகன் (40), தேவி (37), ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல, மாதவரம் பால்பண்ணை போலீசார் சின்ன மாத்தூர், எம்.ஜி.ஆர். சாலை அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாசர்பாடி கணேஷ் (37), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.