பணம் வைத்து சூதாடிய 20 பேர் கும்பல் கைது ரூ. 2.40 லட்சம் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 22:09

சென்னையில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.


சென்னை கோயம்பேடு போலீசார், கோயம்பேடு பூந்தமல்லி ஐரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய கும்பலைச் சேர்ந்த முகப்பேரைச் சேர்ந்த மகேந்திரன் (52), மணி (57), ஸ்ரீதர் (48) உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 10 சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் 20 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.