மின் சேவை குறைபாடு 1912 எண்ணுக்கு டயல் செய்யுங்க

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 20:53

தேனி மாவட்டத்தில், மின் பகிர்மான த்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, மின்வாரியத் துறை புதிய தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் உமா தேவி கூறியதாவது,


தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் தடை நீக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மின் நுகர்வோர்களால் அளிக்கப்படும் புகார்கள் குறித்து விபரங்கள் மின்சார  பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படும், அவர்கள் மூலம்  மின் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக மின்சார வாரியம் மின்சார தடை குறித்த குறைகளை சரி செய்ய இலவச தொலைபேசி சேவை எண்ணை அறிவித்துள்ளது.அதன்படி இலவச சேவை எண்ணாக , 1912, இலவச அலைபேசி எண் 1800 4 25 846  என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் உமாதேவி  தெரிவித்தார்.