சென்னையில் ஒரே நாளில் 5,041 வாகனங்கள் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 19:41

சென்னையில் போலீசார் இன்று ஒரே நாளில் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 5,041 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


சென்னை போலீசார் இன்று நடத்திய வாகன சோதனையில் 144 தடை உத்தரவை மீறியதாக 6,346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4,768 இருசக்கர வாகனங்கள், 118  ஆட்டோக்கள் மற்றும் 155  இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 5,041 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது 2,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரில் ஊரடங்கையொட்டி 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக இதுவரையில் 1,05,432 வழக்குகளும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது  37,040 வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டு 85,998  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.