ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் கொரானா பாதிப்பால் தமிழகம் இரண்டாவது இடம் –முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் குற்றச்சாட்டு.

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 19:19

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம்,  முன்னாள் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தலைமையில், திமுக நிர்வாகிகள்  தமிழக அரசு கொரோனா நோய் தாக்குதலால், ஊரடங்கு உத்ததரவு அமலில் உள்ள போது செய்தவைகள் என்ன என்பது பற்றிய 32 விளக்கங்களை கேட்டு மனுவினை வழங்கினார்கள். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.ஆர்.பெரியகருப்பன், கொரோன என்ற கொடிய நோயை கட்டுபடுத்திட  தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் திருப்திகரமாகவும், வேகமாகவும், இல்லை எனவும், ஆலோசனைகள் சொல்வதை கூட இந்த ஆட்சியாளர்கள் ஏற்பதில்லை என்றவர், கொரானா குறித்த மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. இதனால் கொரானா நோய் தொற்று அதிகம் பரவ காரணமாக அமைந்துள்ளது. கொரானா காலத்தில் பரிவுடன் மக்களை காக்க வேண்டிய அரசு, இந்த காலக்கட்டத்திலும் கொள்ளையடிப்பதைத்தான் செய்து வருகின்றது. ஆட்சியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதால் தான் இந்தியாவில் தமிழகம் கொரானா பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது என குற்றம் சாட்டினார்.