சுசீந்திரம் கோயில் எதிரில் தந்தை, மகனுக்கு கோரோனோ தொற்று ஏற்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:37

ஈத்தாமொழி ஊரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் நடராஜன். இதில் லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் அங்கு ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் இவரும், இவரது மகனும் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் பெற்றுவிட்டு சுசீந்திரத்திலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் வரும்போது மருத்துவ கல்லூரியில் கொரோனோடெஸ்ட் கொடுத்துள்ளனர். இதில் இவர்களுக்கு பாசிட்டிவ் எனத் தெரியவந்தது. இதை அறிந்த சுசீந்தரம் கிராம நிர்வாக அலுவலர் பொது மருத்துவ துறைக்கு தகவல் அளித்தார்.  இவர்கள்   ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் வசித்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.