முதியவர் தற்கொலை

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:36

இரணியல் அருகே கணவன் மனைவி தகராறு. முதியவர் விஷமருந்தி தற்கொலை. இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது , இரணியல்  குதிரைபந்திவிளையைச் சேர்ந்த   செல்லபெருமாள்(67).   

அவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று இரவு   விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்தவர் உடலைக் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.   இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.