தட்டச்சருக்கு கொரோனா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:31

வேர்க்கிளம்பி பத்திரபதிவு தட்டச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த  பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து   முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வேர்க்கிளம்பி   சேர்ந்த பெண்  வேர்க்கிளம்பியில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்ட டதாக தெரிகிறது   நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் அங்கு மருத்துவர்கள்   கொரோனா டெஸ்ட் செய்த போது சந்தேகம் ஏற்பட்டதால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு

பெண்ணிற்கு சளி  பரிசோதித்த டாக்டர்கள்    கொரோனா தொற்று இருப்பதை   உறுதி செய்தனர். இதனால் சுகாதார துறையினர் நேற்று அவர் பணிபுரிந்த அலுவலக வளாகம் , சுற்றுவட்டார பகுதியில் கிருமி நாசினி தெளித்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்தனர்.