சிபி எம் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:31

கல்குளம் தாலுகா அலுவலகம் முன்   கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம்எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின்சார அளவீட்டில் நடந்து உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்,  அறிவிக்கப்பட்ட 20 கோடி லட்சம் பணத்தை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு பங்கிட்டு மத்திய அரசு வழங்க வேண்டும்  போன்ற கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

 மாவட்ட துணை தலைவர் ராஜசேகரன் தலைமையில், செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அந்தோணி முத்து ,  சுசீலா , பிரின்ஸ், ஸ்டீபன், பால் மணி  கலந்து கொண்டனர்.