காப்பி பொடி விலை அதிகரிப்பு வாடிக்கையாளர்கள் கவலை

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:28

குமரி மாவட்டத்தில் காப்பிபொடி விலை திடீர் அதிகரிப்பால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காபி பிரியர்களை கவர்ந்திட  வாடிக்கையாளர் ஆக்கிட  பொதுமக்களை கவரும் விதத்தில் பிரபலமான காப்பிப்பொடிகளின் விளம்பரங்கள் வெளியாகும்.  காப்பிபொடி விலை இந்த மாதம் முதல் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை கிலோ 370 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட காப்பி பொடி தற்பொழுது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கவரும் வாடிக்கையாளகள் விற்பனை அதிகரித்திருப்பதை அறிந்தவுடன் முகத்தை சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காப்பி பொடி விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி சந்தை மற்றும் தற்காலிக சந்தையும் மூடப்பட்டுள்ளதால் ரோட்டோரங்களில் விற்பனை செய்யும் காய்கறி விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.