சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு களங்கம்! சொல்கிறார் நடிகர் சரத்குமார்!

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:26

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையினையும் கலங்கப்படுத்தியுள்ளது-சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் பேட்டி.

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உருவபடத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து

  ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது..

ஜெயராஜ், பென்னிக்ஸ் இழப்பு மிகபெரிய வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.மேலும் நீதிமன்றமும், அரசும் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது  எனதெரிவித்த அவர் இந்த சம்பவம் பாலில் ஒரு துளி விசம் கலந்தது போல் சிறப்பாக செயல்பட்ட ஒட்டு மொத்த காவல்துறையையும் கலங்கப்படுத்தியுள்ளது  என்ற அவர் இதுபோன்ற சம்பவம் நடக்காமலிருக்க சமூகம் பார்த்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார்.