நெல்லை மாவட்டம்: 32 கொரோனா கேள்விகள்? திமுக மனு!

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 17:18

பாளையங்கோட்டை , 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் எத்தனைபேர் , அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி எது என்பது உள்ளிட்ட 32 கேள்விகளுக்கு விபரங்கள் கேட்டு  அதற்கான மனுவை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக, மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுக்கப்பட்டது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதற் கட்ட ஊரடங்கு காலத்தில் இருந்து தற்போது வரை திமுக சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த பகுதிகளிலும் திமுகவினர் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் நெல்லை மாவட்டத்தில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் , அதிகம் பாதித்த பகுதி எது, இதுவரை உயிரிழப்பு எத்தனைபேர் , நோய் தடுப்பு நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட 32 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விபரங்களை கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷை நேரில் சந்தித்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் , மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வாகாப் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மனு அளித்தனர் .

இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கூறுகையில் நெல்லை மாவட்ட கொரோனா பாதிப்புகள் குறித்து ஆட்சியரிடம் விபரம் கேட்டுள்ளோம் , ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருந்தோம் அதற்கு பதில் தரவில்லை , மீண்டும் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு விபரங்கள் குறித்து மனு அளித்துள்ளோம்  அவர்கள் விபரங்கள் தரும் பட்சத்தில்  கொரோனா தாக்கம் உள்ள பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் அதன்படி விபரங்கள் கிடைத்ததும் அதன் அடிப்படையில் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ,  உள்ளிட்ட திமுகவினர்கள் கலந்து கொண்டனர் .

,இதுபோன்று  தென்காசி மாவட்டத்திலும் நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் கொரோனா பாதிப்பு விபரங்கள் கேட்டு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் , பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் உள்ளிட்ட திமுகவினர் ஆட்சியர் அருண்சுந்தர்தயாளனைச் சந்தித்து மனு அளித்தனர் .