மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 17:12

மதுரையில் மேலும் ஏழு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தற்போதுள்ள ஊரடங்கு திங்கள்கிழமை முடிவடைவதால், ஜூலை 12..ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும். மேலும், மதுரையில் ஹோட்டல் உரிமையாளர்கள் பொது மக்கள் நலன் கருதி ஜூலை மாத இறுதி வரை பார்சல்கள் மட்டுமே ஹோட்டல்களில் வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.