மதுரையில் ஜுலை 12 ம் தேதி வரை கடைகள் அடைப்பு நகை வணிகர்கள் முடிவு .

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 17:04

மதுரை ஜீவல்லர்ஸ் & புல்லியன் மெர்ச்செண்ட்ஸ் அசோசியேஷன்  விடுத்துள்ள அறிக்கையில்:

 மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கொடிய தொற்று நோய் கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதில் ,  நமது வணிக  சமுதாயத்தினர் அனேகம்பேர் இந்த கொரோனாவால் பாதித்து உயிர் நீத்துள்ளனர் . இந்நிலையில் தங்க நகை வணிகத்தின் நன்மை கருதியும் , வணிகர்களின் உயிர், மற்றும் உடமைகளின்  பாதுகாப்பு கருதியும் ,  வருகின்ற 06.07.2020 முதல் 12.07.2020 வரை  அரசு லாக்டவுன்  *நீங்கினாலும், நாம்  முழுநேரக் கடையடைப்பு மேற்கொள்வது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இறைவனின் அருட் கொடையினால் நமக்கு வழங்கப்பட்ட உயிர் மற்றும் வாழ்வாதாரத்தினை,  தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வியாபாரம் செய்வது என்ற காரணத்தினால் கொரோனா என்ற அரக்கனின் கையில் கொடுத்து ,   ஒளிமயமான எதிர்காலத்தை இழந்து நமது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் . நம்முடைய ஒற்றுமையை சீர்குலைக்கும் எந்த ஒரு செயல்களிலும் உறுப்பினர்கள் மற்றும் வணிகப் பெருமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .  வாழ்க்கை வாழ்வதற்கே,  அதற்கு நாம் என்றும் உடன்  இருக்க வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு தங்கம்,  வெள்ளி, வைரம், நகை வணிகர்களும், பொற்கொல்லர்களும் , மற்றும் பான் புரோக்கர்கள் உள்ளிட்டோரும் , பெரிய நிறுவனங்கள்,  சிறிய நிறுவனங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ~06.07.2020  முதல் 12.07.2020  வரை  தங்கள் கடைகளை திறக்காமல் முழுநேரக்கடை அடைப்பு செய்து கொரோனா நோய்த்தொற்றை முற்றிலுமாக ஒழிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு

 B . லோகநாதன்

 கெளரவப் பொது செயலாளர்

       MJBMA - இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.