விருதுநகர் அரசு மருத்துவமனையில் கோரோனோ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலன்றி உயிரிழப்பு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 16:42

விருதுநகர் உள்ள சின்ன மூப்பன் பட்டி கிராமத்தில்  60 வயது முதியவர் ஒருவர்   உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாதம் 30 ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக்க அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோரோனோ பரிசோதனை செய்யபபட்டது.  பரிசோதனை முடிவில் நேற்று   அவருக்கு கோரோனோ தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து முதியோர்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று  காலை அரசு  மருத்துவமனையில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கோரோனோ தொற்றால்  உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது .