அரும்பாக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் ‘போலீஸ்’ என வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் போலீசார் விளக்கம்

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 20:06

சென்னை அரும்பாக்கத்தில் இன்று காலையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவை ஏற்படுத்திய வாலிபர் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் என போலியாக ஒட்டியிருந்ததால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் கூறியதாவது, ‘‘அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற வாலிபர் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது அந்த வழியாக தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் வந்தார். அவரது வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவரை மடக்கி அது தொடர்பாக கேட்ட போது அவர் போலீஸ் இல்லை எனவும் அவர் பொய்யாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது தெரியவந்தது. இதனால் அவர் மோசடி ஆசாமியாக இருக்கலாம் என்பதால் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்த போதுதான் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. பின்னர் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்ததால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்’’ இவ்வாறு தெரிவித்தனர்.