கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 19:01

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 18 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 247 ஆக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.