கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் திறப்பு விழா!

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 19:00

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தல் எடுக்கப்படும் கொரோனா நோய் தொற்று பரிசோதனைகள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டே முடிவுகள் அறியப்பட்டு வந்தது.  இதனால் சில நேரங்களில் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே தென்காசி மாவட்டத்திற்கு தனி பரிசோதனை மையம் அமைக்க அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் 65 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடங்க நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர்தயாளன் கலந்து கொண்டு  பரிசோதனை மைய செயல்பாடுகளை தொடங்கி வைத்தார் இங்கு 24 மணி நேரமும் பரிசோதனை செய்யப்படும். மேலும் 6 பணியாளர்கள் பணி புரிய உள்ளதாகவும் ஒரு நாளுக்கு 300 பேருக்கு  பரிசோதனை மேற் கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் மூலம் இனி மாவட்டத்தில் எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் விரைவில் கண்டறியப்பட்டு நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்தப்படும் .