நெல்லை மாவட்டம் உச்சம் அடைகிறது கொரோனா!

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 18:59

நெல்லையில் அரசு மருத்துவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 751 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றுமத் பெண் மருத்துவர் ஒருவருக்கும் , பாளையங்கோட்டை சிவந்திபட்டி சாலையில் 4 வயது குழந்தை, மூலக்கரைப்பட்டியில் 2 வயது ஆண் குழந்தை  உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 751 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது