ஜமாபந்தி இன்று நடக்கும் கிராமம்

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 18:56

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் 1429 ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் 29 மற்றும் 30 ம் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சம்மந்தபட்ட வட்டத்தில் உள்ள அலுவலகத்தில் கலந்து கொண்டனர். இன்று (30 ம் தேதி) எந்தந்த கிராமங்களுக்கு நடக்கிறது.

அகஸ்தீஸ்வரம் வட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் சுசீந்திரம் குறுவட்டத்தில் உள்ள சுசீந்திரம் கிராமம், இரவிபுதூர் கிராமம், தேரூர் கிராமம், ராமபுரம் கிராமம், மருங்கூர் கிராமம், நல்லூர் கிராமம், குலசேகரபுரம் கிராமம், மைலாடி கிராமத்துக்கும், கன்னியாகுமரி குறு வட்டத்தில் உள்ள கன்னியாகுமரி கிராமம், லீபுரம் கிராமம், அகஸ்தீஸ்வரம் கிராமம், கோவளம் கிராமம், அழகப்பபுரம் கிராமம், அஞ்சுகிராமம் கிராமம், கொட்டாரம் கிழக்கு, மேற்கு கிராமங்கள், வடக்கு தாமரைக்குளம் கிராமம், தெற்கு தாமரைக்குளம் கிராமங்களுக்கும் நடக்கிறது.

தோவாளை வட்டம்

தோவாளை வட்டத்தில் பூதப்பாண்டி குறுவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி கிராமம், சிறமடம் கிராமம், இறச்சகுளம் கிராமம், நாவல்காடு கிராமம், தாழக்குடி கிராமம், ஈசாந்திமங்கலம் வடக்கு, தெற்கு கிராமங்களுக்கும் நடக்கிறது.

கல்குளம் வட்டம்

கல்குளம் வட்டத்தில் குளச்சல் குறுவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் கிராமம், மணவாளக்குறிச்சி கிராமம், லெட்சுமிபுரம் கிராமம், வெள்ளிச்சந்தை எ, பி கிராமங்கள், வேளிமலை கிராமம்மண்டைக்காடு கிராமம், குளச்சல் எ, பி நகரங்கள், சைமன் காலனி கிராமம், ரீத்தாபுரம் கிராமம், செம்பொன்விளை கிராமம், நெய்யூர் கிராமம், கல்லுக்கூட்டம் கிராமங்களுக்கும், குருந்தன்கோடு குறு வட்டத்தில் உள்ள தலகுளம் கிராமம், குருந்தன்கோடு எ, பி கிராமங்கள், திங்கள் நகர் கிராமம், கக்கோட்டுதலை கிராமம், ஆளூர் எ, பி கிராமங்கள், வில்லுக்குறி எ, பி, சி கிராமங்களுக்கும் நடக்கிறது.

திருவட்டார் வட்டம்

திருவட்டார் வட்டத்தில் குலசேகரம் குறு வட்டத்தில் உள்ள திற்பரப்பு கிராமம், பொன்மனை எ, பி கிராமங்கள், தும்பக்கோடு எ, பி கிராமங்கள், சுருளகோடு கிராமம், பேச்சிப்பாறை கிராமம், பெருஞ்சாணி கிராமங்களுக்கு நடக்கிறது.

விளவங்கோடு வட்டம்

விளவங்கோடு வட்டத்தில் அருமனை குறு வட்டத்தில் உள்ள அருமனை கிராமம், மஞ்சாலுமூடு கிராமம், வெள்ளாங்கோடு கிராமம், முழுக்கோடு கிராமம், சிதறால் கிராமம், களியல் கிராமம், கடையால் கிராமம், மாங்கோடு கிராமம், புலியூர்சாலை கிராமங்களுக்கு நடக்கிறது.

கிள்ளியூர் வட்டம்

கிள்ளியூர் வட்டத்தில் பைங்குளம் குறுவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு எ, பி கிராமங்கள், சூழால் கிராமம், குளப்புறம் கிராமம், அதங்கோடு கிராமம், ஆறுதேசம் கிராமம், முஞ்சிறை கிராமம், பைங்குளம் கிராமம், தேங்காய்பட்டணம் கிராமம், ஏழுதேசம் எ, பி, சி கிராமங்கள், மெதுகும்மல் கிராமம், அடைக்காகுழி கிராமங்களுக்கும் நடக்கிறது.