கன்னியாகுமரி மாவட்டம் பைக் மோதி முதியவர் பலி

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 18:13

இரணியல் அருகே மோட்டார் பைக் மோதி கூலித் தொழிலாளி பலியானார். இது  குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது இரணியல்  பாறையடி கனியா குளத்தைச் சேர்ந்த  அய்யப்பன்(70). கூலி தொழிலாளி. 

இவரது மனைவி பார்வதிபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரி கேன்டீனில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அய்யப்பன்   மனைவியைப் பார்க்க  ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளார். பார்வதிபுரத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் மெயின் ரோட்டை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக     மோட்டார் பைக் மோதி தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார் . படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள்   இறந்து போனதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.