சாத்தான்குளம் சம்பவம் வணிகர்கள் கடையடைப்பு!

பதிவு செய்த நாள் : 26 ஜூன் 2020 17:35

தூத்துக்குடியில் வணிகர்கள் உயிரிழந்த விவகாரம் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் நடைபெற்ற கடையடைப்பு மார்த்தாண்டம்,  குலசேகரம், தக்கலை பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தூத்துக்குடியில் தந்தை, மகன் என இரண்டு வணிகர்கள் சிறைசாலையில் உயிரழந்த சம்பவம் தொடர்பாக இன்று தமிழ் நாடு முழுவதும் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கபட்டது. அதன் ஒரு பகுதியாக தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குலசேகரம் உட்பட பல பகுதிகளில் இருவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது. மேலும், குமரி மாவட்டம் முழுவதும் 90 சதவீதம் கடைகள் அடைக்கபட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கபட்டது.