மதுரை இளைஞர் உட்பட பல்வேறு நபர்களிடம் "டிக்டாக்" மூலம் பணம் மோசடி செய்த "பெண் "கைது.!!!

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2020 17:03

திருப்பூரை சேர்ந்த இளம் பெண் டிக்டாக் மூலமாக பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்ததாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் அந்த இளம்பெண்ணை பிடிப்பதற்கு மதுரை மாநகர் , காவல்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் . திரு . டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்  அவர்கள் உத்தரவின் படி , காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு திரு.பழனிக்குமார் , அவர்கள் மேற்பார்வையில் , திரு.ஜெயக்குமார் காவல் உதவி ஆணையர் திலகர்திடல்  மற்றும் சி 3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு ஆலோசனையின் பேரில் ,,சார்பு ஆய்வாளர் மணிக்குமார் தலைமையில் தனிப்படையினர் திருப்பூர் ஆலங்காடு , வீரபாண்டி பிரிவு அருகில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த அந்த பெண்மணியை 


கைது செய்து விசாரணை செய்ததில் முகநூலில் மூலம் பல இளைஞர்களிடம் பலவித காரணங்களை சொல்லி ஆசை வார்த்தை மூலம் நம்பவைத்து ஏமாற்றி பணத்தை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ள விபரம் தெரியவந்ததின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை செய்ததில் குற்றங்கள் செய்ததை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்... அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.