ஜோதிமணி, பிரசன்னாவை கைது செய்ய ஹெச். ராஜா வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 21:05

காரைக்குடி

பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று பேசியிருக்கும் ஜோதிமணியையும், பிரசன்னாவையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கேட்டுககொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இவ்வாறு கூறினார். 

பட்டியலின மக்களை அவமரியாதையாகப் பேசிய , தயாநிதி மாறனையும், ஆர்.எஸ்.. பாரதியையும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் எச்.ராஜா கூறினார்.

தி க, திமுக போன்ற திராவிட இயக்கங்கள் அனைத்தும் எப்போதுமே பட்டியலின மக்களின் விரோதிகள் என்றஎச். ராஜா, முரசொலி இட விவகாரத்தில் ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வருவாய் துறையில் உள்ள ஆவணத்தை யார் வேண்டுமானாலும் திருத்தலாம்,காசு கொடுத்தால் வருவாய் துறையினரே, ஆவணங்களை திருத்தி கொடுத்து விடுவார்கள் என்றும் கூறினார்.