பண்டைய மதுரையின் தலைநகராக கருதப்படும் மணலூரில் இன்று அகழாய்வு பணி துவங்கியது.

பதிவு செய்த நாள் : 23 மே 2020 21:03

கீழடி 6ம் கட்ட அகழாய்வின்ஒரு பகுதியாக இன்று மணலூரில் அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாயவுகள் நடந்து முடிந்துள்ளன. 

கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் 40 லட்ச ரூபாய் செலவில் கீழடியில் தொடங்கப்பட்டன. இம்முறை கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் என 4 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், மணலூர் தவிர்த்து மற்ற இடங்களில் தொடங்கப்பட்டன. கொரானோ பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அகழாய்வு மே 20ல் மீண்டும் தொடங்கிய நிலையில் மணலூரிலும் பணிகள் தொடங்க ஏற்பாடுகள் நடந்தன. 

மணலூர் வரத்து கால்வாய் ஓரம் யோகலட்சுமி என்பவரின் 2 ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர் மூக் கவசம் அணிந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  பண்டைய மதுரையின் நகரம் மணலூர் என கருதப்படும் நிலையில், இங்கு  நடைபெறும் அகழாய்வால் கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.