கம்பத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிபிஎம் கட்சியினர் கைது

பதிவு செய்த நாள் : 23 மே 2020 20:44

தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சிபிஎம் கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அவசர கதியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது அதில்  இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.

தொற்று இல்லாத கம்பம் பகுதியில் வெளியூரிலிருந்து தொற்று உள்ள குழந்தைகளை அழைத்து வந்து சிகிச்சை செய்வதை கண்டித்தும் வசதிகள் இல்லாத கம்பம் அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவை ஏற்படுத்தியதை கண்டித்து சிபிஎம் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஏரியா செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எஸ் பண்ணிடு வேலி பாலகுருநாதன் கர்ணன் ஐயப்பன் உள்ளிட்ட 9 பேர்கள் கலந்து கொண்டனர். ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 9 நபர்களையும் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கீதா கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தார்.