துபாயில் உயிருக்கு போராடிய போடி வாலிபர் தேனி அழைத்துவரப்பட்டார்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 20:35

தேனி மாவட்டம் போடி வாலிபர் துபாய்க்கு வேலைக்கு சென்றவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை,  எம் பி ரவீந்திரநாத் குமார், முயற்சியின் பேரில் மீண்டும் தேனிக்கு அழைத்துவரப்பட்டார். தேனி மாவட்டம் போடி நகரைச் சேர்ந்தவர் செல்வம் கலா தம்பதியினர். இவர்களது மகன் கணேஷ் குமார் (வயது 27). ஏஜென்டு உதவியுடன் துபாய் நாட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் கணேஷ் குமார் வேலைக்கு சென்றார். சுற்றுலா விசாவில் சென்றவருக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. உதவி கிடைக்காமல்  முகநூல், மற்றும் வாட்ஸ் ஆப் சமூக வலைத்தளங்களில் தன் உயிருக்கு ஆபத்தாக உள்ளது உதவி தேவை என்றும் பதிவு செய்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப. ரவீந்திரநாத் குமார் தூதரகம் மூலமாக பேசி உடனடியாக அங்கு கணேஷ்குமாருக்கு மருத்துவ உதவிகள் செய்து, பின்னர் அவர் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்தார். அதன்பேரில் வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு கேரளாவை வந்தடைந்து அங்கிருந்து கார் மூலம் குமுளி வழியாக தேனி மாவட்டம் வந்தார்.

தற்போது வாலிபர் கணேஷ்குமார் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உடன் பெற்றோர்கள் தங்கியுள்ளனர். கணேஷ் குமாரின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது துணை முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.