தாமிரபரணி ஆறு தண்ணீரில் மிதந்து வந்த சடலம் போலீசார் விசாரணை!

பதிவு செய்த நாள் : 23 மே 2020 19:43

பாளையங்கோட்டை , நெல்லை மாவட்டம் சுத்தமல்லி தாமிரபரணி ஆறு அணைக்கட்டு பகுதியில் மிதந்து வந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் . அவரது உடலைக் கைப்பற்றி முன்னீர்பள்ளம் போலீசார் அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமானவர்கள் வந்து குளிப்பது வழக்கம் . 

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தடுப்பணை பகுதியில் சற்று அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத  ஆண் சடலம் ஒன்று தண்ணிரீல் மிதந்து வந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிலர் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர் . 

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடலை மீட்டு முன்னீர்பள்ளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர் . முன்னீர்பள்ளம் போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் , அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .