ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ தங்கபாண்டியன் வழங்கினார்.

பதிவு செய்த நாள் : 23 மே 2020 19:42

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி, தளவாய்புரம் ஊராட்சியில் உள்ள  தளவாய்புரம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தில் உள்ள 72 நபர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன்  அரிசி,காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினார். 

இந்நிகழ்வில்  நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் எம்எல்ஏ-விற்கு நன்றி தெரிவித்தனர். இதில் இளைஞர் அணி சிவக்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி,பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் தங்கமணி,தங்கராஜ் சங்கத்தின் தலைவர் வைரமுத்து,செயலாளர் முகேஷ் கழக நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.