நெல்லை தென்காசி கொரோனா தொற்று நிலவரம்?

பதிவு செய்த நாள் : 23 மே 2020 19:33

நெல்லை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கும் , தென்காசி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகராஷ்ட்ராவில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மகராஷ்ட்ரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் நெல்லை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மானூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் உள்பட மேலப்பாளையம் , மேலப்பாட்டம், பாளையங்கோட்டை , ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் . இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் மகராஷ்ட்ராவில் இருந்து வந்தவர்கள் ஆவர் . இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் குணமடைந்த நிலையில் 191 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . தென்காசி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கடையம் பகுதி முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் , மற்றொருவர் தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவர் . தென்காசி மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு மாவட்ட மக்களும் அச்சத்தில் உள்ளனர் .

இதனிடையே கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நெல்லை மாவட்ட மானூரைச் சேர்ந்த  3 பேர் , தெற்கு அரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் , தென்காசி மாவட்டம் ஆயாள்பட்டியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் .