நெல்லை சிந்துபூந்துறை கொரோனா எதிரொலி அதிகாரிகள் ஆய்வு

பதிவு செய்த நாள் : 23 மே 2020 18:05

நெல்லை சிந்துபூந்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதி கொரோனா தொற்று பாதித்த பகுதியாக மாநராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு எச்சரிக்கைப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் நேரில் ஆய்வு செய்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார் .

நெல்லை மாநகர் பகுதியைப் பொறுத்தவரை மேலப்பாளையம், பாளையங்கோட்டை , டவுண் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று குணம் அடைந்த நிலையில் மாநகர் பகுதியில் யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில்  நெல்லை மாநகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் டிவி மெக்கானீக்கிற்கு  நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதனையடுத்து சிந்துபூந்துறை பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதி தொற்று பாதிக்கப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, காய்ச்சல் , சளி உள்ளிட்ட தொந்தரவு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சிந்துபூந்துறை பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் , அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு குடியிருப்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து இங்கு சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள ஆணையர் கண்ணன் உத்தரவிட்டார் . ஏற்கனவே தொற்று பாதித்தவரின் வீட்டின் அருகில் உள்ளவர்கள் , அவருடன் பழகியவர்கள் என 10 மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிந்துபூந்துறை பகுதியில் இருந்து தொற்று மற்ற இடங்களுக்கு பராவாமல் இருக்கும் வகையில் அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.