கன்னியாகுமரி மாவட்டம் 11091 பேருக்கு மருத்துவ பரிசோதனை

பதிவு செய்த நாள் : 23 மே 2020 12:53

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்களாலும் 23 ம் தேதி நிலவரப்படி 11091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 10696 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 16 பேர் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதி உள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு உள்ளது