தேனியில் கரோனாவுக்கு இரண்டாவது உயிர் பலி

பதிவு செய்த நாள் : 22 மே 2020 23:00

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இரண்டாவது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சி பகுதி பி.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சுருளி முத்து (வயது 69). இவர் கரோனா தொற்று காரணமாக தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் இன்று ரத்த அழுத்தம் இருதயக் கோளாறு காரணமாக சுருளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் கரோனா தொற்று உள்ளவர்கள் 96 நபர்கள். இவர்களில் 50 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர், இதில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் இறந்தார்.

மற்றவர்கள் தேனி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஓடைபட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்ததால் அங்கிருந்து தொற்று ஏற்பட்டு அவர் மூலம் ஓடைப்பட்டி. பகுதியில், 17 நபர்களுக்கு பரவியது, அதனை தொடர்ந்து முத்துலாபுரம் ஊராட்சி பகுதியிலும் 11 பேர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது.