பெண் டெபுடி கமிஷனரின் மகனுக்கு கொரோனா

பதிவு செய்த நாள் : 22 மே 2020 22:31

சென்னை, 

சென்னை நகரில் பணிபுரியும் பெண் துணைக்கமிஷனரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இதுவரை அதிகாரிகள் உள்பட 200 போலீசாருக்கு கொரோனா தொற்று நோய் தாக்கியுள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக பணிபுரியும் ஒரு பெண் அதிகாரியின் 27 வயது மகனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஆர்த்தோ டாக்டருக்கு படித்து வருகிறார். அவர் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.