முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ. 10.65 லட்சம் அபராதம் வசூல்

பதிவு செய்த நாள் : 22 மே 2020 22:28

சென்னை, மே. 22–

சென்னையில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் நேற்று ஒரே நாளில் ரூ. 10.65 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் சார்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று காலையில் இருந்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் ரூ. 500 அபராதம் வசூலித்தனர். இன்று காலை முதல் இரவு வரை போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் முகக்கவசம் அணியாத 2,130 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து

ரூ. 500 வீதம் ஒரே நாளில் ரூ. 10 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.