தமிழக காவல் துறையின் அவசர அழைப்பு எண் மாற்றம்: தற்காலிகமாக புதிய எண்கள் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 22 மே 2020 21:01

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்களின் செல்போனில் இருந்து அவசர தொலைபேசி எண்ணான 100, 112 என்ற எண்ணுக்குரிய அழைப்புக்களை காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் 22.05.2020 முதல் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 100, 112 ஆகிய எண்களுக்கு பதிலாக இந்த புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.