தென்காசி மாவட்டம் குடிமராமத்து பணிகள் துவக்கம் அமைச்சர் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 22 மே 2020 20:27

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம் தென்மலை கண்மாய் புணரமைக்கும் பணியை  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  ராஜலட்சுமி தொடங்கி வைத்தார் .

தென்காசி  மாவட்டத்தில்  முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் சிவகிரி வட்டம் தென்மலை கிராமத்தில் உள்ள தென்மலை கண்மாய் புணரமைக்கும் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தாயளன் தலைமையில் நடைபெற்றது.  இதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  ராஜலெட்சுமி  கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து  பார்வையிட்டார்.  பின்னர் அவர் நிகழ்வில் பேசுகையில்   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு 2020-2021 நிதியாண்டில் தென்காசி மாவட்டத்திற்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல்வேறு நலப்பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமத்தில் உள்ள இலந்தைக்குளம் கண்மாய் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலும், சிவகிரி வட்டம் தென்மலை கிராமத்தில் உள்ள தென்மலை கண்மாய் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டிலும், சங்கரன்கோவில் வட்டம், மணலூர் கிராமத்தில் உள்ள மணலூர் கண்மாயில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டிலும், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமத்தில் உள்ள நாராயணபேரி கண்மாய் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் , சிவகிரி வட்டம், அரியூர் கிராமத்திலுள்ள அரியூர் கண்மாய் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில், சங்கரன்கோவில் வட்டம், பெரும்பத்தூர் கிராமத்திலுள்ள பெரும்பத்தூர் கண்மாய் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டிலும், சிவகிரி வட்டம், தேவிபட்டினம் கிராமத்திலுள்ள செங்குளம் கண்மாய் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டிலும், சங்கரன்கோவில் வட்டம், பனையூர் கிராமத்தில் வயலிமிட்ட கண்மாயை ரூ. 21 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ. 303 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-2021 ம் நிதியாண்டில் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் தென்மலை கிராமத்திலுள்ள தென்மலை கண்மாயில் புணரமைக்கும் பணி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .