பத்மனாபபுரம் நகராட்சி முன் குமரி மாவட்ட தொழில் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை கண்டன ஆர்பாட்டம்

பதிவு செய்த நாள் : 22 மே 2020 17:07

பத்மனாபபுரம் நகராட்சி முன் குமரி மாவட்ட தொழில் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை கண்டன ஆர்பாட்டம் நடந்தது. 8 மணி வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது. தொழிலாளர் சட்டங்களை இடை நீக்கம் செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது. பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற நிலுவைத்தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை ரத்து செய்யவும் கோவிட் 19 கிருமி தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வரும் மருத்துவ மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை நிரந்தரப்படுத்தவும் அரசு அறிவித்த ஊதியத்தை உள்ளாட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க கேட்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் திருவட்டார் மார்த்தாண்டம் தக்கலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது. பத்மனாபபுரம் நகராட்சி முன் சி.ஐ.டி.யு, எல்.பி.எப், ஐ.என்.டி.யூ.சி, எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி.சி.றி.யு, எம்.எல்.எப் ஆகிய இயக்கங்கள் சார்ந்த நிகழ்ச்சிக்கு ஜாண் சவுந்தர் ராஜ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் முன்னிலை வகித்து கோஷங்களிட்டு போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில் சி.ஐ.டி.யு மாநில குழு உறுப்பினர் சந்திரகலா மற்றும் காளி பிரசாத். சிதம்பரம், ராஜகனி ஆகியோர் கலந்து கொண்டனர்.