நெல்லை தென்காசி மாவட்டம் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் தொற்று.. பொதுஜனங்கள் அட்சம்

பதிவு செய்த நாள் : 21 மே 2020 20:24

நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து ஏராளமானவர்கள் திரும்பி வருவதால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமா உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகராஷ்ட்ரா மாநிலம் மும்பை பகுதியில் இருந்து ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு 500 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மார்க்கமாக வந்த வண்ணம் உள்ளனர் . இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிமாநிலத்தவர் வருகையால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் வேகமாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேலும் அம்பாசமுத்திரம் வைராவிக்குளம் பகுதியில் 3 பேருக்கும் , நாங்குநேரி பகுதியில் 2 பேருக்கும் , வள்ளியூரில் 2 பேருக்கும் , பாளையங்கோட்டையில் 2 பேருக்கும் மானுர், களக்காடு ஆகிய பகுதியில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 163-ல் இருந்து 174- ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 253 ஆக அதிகரித்து உள்ளது.

இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் 4 பேருக்கும் , கடையநல்லூ்ர் அருகே உள்ள பெய்கையில் ஒருவருக்கும் ஆலங்குளம் பகுதியில் ஒருவருக்கும் , சேர்வைக்காரன்பட்டியில் ஒருவருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.