பொருளாதாரத்தை மீட்க அரசு அறிவித்துள்ள திட்டங்களை அறிவிப்புகளை வரவேற்க வேண்டும் - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

பதிவு செய்த நாள் : 15 மே 2020 22:48

தூத்துக்குடி மாநராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று திறந்து வைத்தார்.பேரிடர் மேலாண்மை மற்றும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து  ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மூலம் 3000 கர்ப்பிணிகள் பயனடைவார்கள்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில்  கோரோனா இதுவரை 6724 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.38 பேர் பாதிக்கப்பட்டுள்ளது.

இளம்புவனம், பாண்டவர் மங்களம், மழவராயநத்தம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தபட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா நமது மாவட்டத்தில் பணியாற்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மத்திய அரசு விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடியில் மூன்றாயிரம் கோடி அளவுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார பாதிப்பு இருக்கும் நிலையில் நெருக்கடியிலிருந்து மீள அறிவித்துள்ள திட்டங்களை அரசியல் வேறுபாடின்றி அறிவிப்புகளை நாம் வரவேற்க வேண்டும். தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைக்க வல்லுநர் குழுவை அரசு அமைத்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் அரசு சரியான திட்டங்களை அறிவிக்கும். தமிழகத்தில் சரியான நேரத்தில் போக்குவரத்து செயல்பாடுகள் அறிவிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 460 பேர் பீகார், ஜார்கண்ட் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள் 7000பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி , மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.