மே....12... நாளை உலக செவிலியர் தினம்

பதிவு செய்த நாள் : 11 மே 2020 16:33

உலக நாடு­கள் அனைத்­தி­லும் மே 12-ம்  நாளன்று உலக செவி­லி­யர் தினம் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.உல­கில் செவி­லி­யர்­க­ளுக்­காக முதன் முத­லில் பயிற்­சிப் பள்­ளி­யைத் தொடங்­கி­ய­வர் இத்­தா­லி­யைச் சேர்ந்த பிளா­ரன்ஸ் நைட்­டிங்­கேல் என்ற செவி­லி­யர்­தான். அத­னால்­தான் இவ­ரது பிறந்த நாளை செவி­லி­யர் தின­மா­கக் கொண்­டா­டு­கி­றார்­கள்.

பிளா­ரன்ஸ் நைட்­டிங்­கேல் அவர்­கள், தொண்­டில் சிறந்து விளங்­கி­ய­து­டன் கிரி­மியா போரில் உயி­ருக்­குப் போரா­டிய பல­ரின் கண்­க­ளுக்கு 'கைவி­ளக்கு ஏந்­திய தேவதை'யாகத் தோன்­றி­னார்.   பிளா­ரன்ஸ் நைட்­டிங்­கேல் அவர்­கள் பிறந்த 200வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு, 2020ம் ஆண்டு, செவி­லி­யர் மற்­றும், தாதி­யர் உலக ஆண்­டாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது

உலக சுகா­தார நிறு­வ­னம், ஐ.நா. அமைப்­பு­க­ளும், அவற்­றோடு ஒத்­து­ழைப்­ப­வர்­க­ளும், அனைத்து நாடு­க­ளும், இந்த நல­வாழ்­வுப் பணி­யா­ளர்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து, இன்­னும் அதி­க­மான பணி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வ­தில் அக்­கறை காட்­டு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளது. தற்­போது உல­கில் 2 கோடியே 20 இலட்­சம் செவி­லி­ய­ரும், தாதி­ய­ரும், பணி­யாற்­று­கின்­ற­னர், இவர்­கள், உலக அள­வில் நல­வாழ்­வுப் பணி­யாற்­று­வோ­ரில் பாதி­ பேர் என்­று­உ­லக சுகா­தார  நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. 2030ம் ஆண்­டுக்­குள் அனை­வ­ருக்­கும் நல­வாழ்வு வச­தி­கள் கிடைக்க வேண்­டு­மெ­னில், மேலும் 90 இலட்­சம் செவி­லி­யர் மற்­றும்  தாதி­யர், இவ்­வு­ல­கிற்­குத் தேவைப்­ப­டு­கின்­ற­னர் என உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

செவி­லி­யர்­கள் பணி­ சேவை மனப்­பான்மை மிக்­கது.

அவர்­க­ளின் இத்­த­கைய சேவைக்கு ஈடு இணை இந்த உல­கில் எது­வும் இல்லை என்­பதை சுகா­தா­ரப் பேரி­டர்

காலங்­க­ளில் நாம் உண­ர­லாம். கொரோனா நமக்கு இப்­போது அதை உணர்த்தி இருக்­கி­றது. பரி­வன்­போ­டும் பண்­போ­டும், நம் உடல் நல­னில் அக்­கறை செலுத்­தும் அவர்­க­ளின் சேவையை சாதா­ரண நாட்­க­ளில் இருப்­பதை விட இன்­றைய சூழ­லில் பெரும் தியா­கத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. அவர்­க­ளின் தியா­கத்­துக்கு இந்த நாளில் நன்றி சொல்­வோம்.