தூத்துக்குடி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அதிரடி மாற்றம்

பதிவு செய்த நாள் : 10 மே 2020 10:25

தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் ஓரளவு கட்டுப்பாடுக்கு உள்ளே இருந்தது. கடந்த சில நாட்களாக சென்னையில் வைரஸ் எதிரொலி அதிகமாக காணப்படுகிறது. சென்னையிலிருந்து ஏராளமானோர் தென்மாவட்டங்களுக்கு திரும்புகின்றனர்

இந்நிலையில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வைரஸின் தாக்கம் கூடுதலாகிறது. மருத்துவ பரிசோதனை சம்பந்தமாக வீடியோ ஒன்று வைரலாகி பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகிறது. இதனடிப்படையில்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்  திருவாசகமணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அதிரடி மாற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரான மருத்துவர் திருவாசகமணி பயிற்சி மருத்துவர் ஒருவரிடம் கொரோனா பரிசோதனை தொடர்பான ’பரிசோதனை கிட்கள்’ இல்லையென்பதால் சோதனை செய்யாமாலேயே கொரோனா தொற்று இல்லை என்று நெகடிவ் அறிக்கை தருமாறும் கூறுவதாக ஒரு வீடியோ  சமூக வலைதளங்களில் பரவியது.  

இதையடுத்து நேற்று இரவு  அதிரடியாக திருவாசகமணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.. இந்த அறிவிப்பு மருத்துவத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.