நாகா நிறுவனம் ரூ.50லட்சம் நிதியுதவி

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 21:28

திண்டுக்கல் :

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் தடுப்பு நிவாரணப் பணிக்ளுக்கு உதவ பல்வேறு நிறுவனங்கள் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

திண்டுக்கல் நாகா நிறுவனம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 50 லட்சம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.